
நாம் செய்வது மட்டும்தான் சரி என்று நினைப்பது ஒரு நல்ல அரசாங்கத்தின் அடையாளம் அல்ல. மாறாக, ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை எங்களிடம் கேட்டறிந்து, அதற்குரிய தீர்வுகளைக் காண்பதே சிறந்த அரசாங்கத்தின் பண்பாகும்” என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து மலையக பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து பின்வரும் முக்கிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஜனாதிபதி அவர்கள் கடந்த ‘டிட்வா’ புயல் பாதிப்புகள் தொடர்பாக, கொத்மலை – வேவன்டன் தோட்டத்தை மையப்படுத்திப் பேசியிருந்தார்.
எனினும், இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாகப் பல கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், இதுவரை அவற்றுக்கு எவ்வித பதிலும் கிடைக்கப் பெறவில்லை என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை தொடர்பாகப் பேசப்பட வேண்டியது தற்போதைய சூழலில் மிகக் கட்டாயமானதாகும். மக்களுக்கான காணியுரிமையை வழங்குவதற்கென ஏற்கனவே அமைச்சரவை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வெறுமனே வைத்திருக்காமல், தற்போது உடனடியாக அமுல்படுத்தினாலே அது மக்களுக்குப் பெருமளவில் பயனுள்ளதாக அமையும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் பெருந்தோட்ட மக்களின் காணியுரிமை தொடர்பாகப் பேசப்பட வேண்டியது தற்போதைய சூழலில் மிகக் கட்டாயமானதாகும்.
மக்களுக்கான காணியுரிமையை வழங்குவதற்கென ஏற்கனவே அமைச்சரவை அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றை வெறுமனே வைத்திருக்காமல், தற்போது உடனடியாக அமுல்படுத்தினாலே அது மக்களுக்குப் பெருமளவில் பயனுள்ளதாக அமையும் என அமைச்சர் வலியுறுத்தினார்.





