இலங்கை

நோர்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

 

நோர்வே: சர்வதேச செஸ் அரங்கில் இந்தியாவிற்கு மீண்டும் ஒரு பெருமைமிகு தருணம்! 2026 நோர்வே செஸ் தொடரில் (Norway Chess 2026) இளம் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

படைக்கப்பட்ட புதிய சாதனைகள்:
• முதல் இந்தியர்: நோர்வே செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற வரலாற்றுப் பெருமையை பிரக்ஞானந்தா பெற்றுள்ளார்.

• தொடர் வெற்றிகள்: இத்தொடரின் 4 கிளாசிக்கல் போட்டிகளில் (Classical Matches) தொடர்ச்சியாக வெற்றி பெற்று இந்த சாம்பியன் பட்டத்தை அவர் முத்திரையிட்டுள்ளார்.

• இறுதிப்போட்டி: பரபரப்பான இறுதிப்போட்டியில் ஜெர்மனி நாட்டின் வீரர் கெய்மரை வீழ்த்தி பிரக்ஞானந்தா மகுடம் சூடினார்.

உலக அரங்கில் தமிழனின் அறிவுத்திறன்: தமிழர்களாகப் பெருமிதம் கொள்வோம்!

சதுரங்கம் (செஸ்) உருவானதாகக் கருதப்படும் இந்தத் தமிழ் மண்ணிலிருந்து புறப்பட்டு, இன்று உலகையே தனது புத்தி கூர்மையால் வியக்க வைத்திருக்கிறார் நம்ம ஊர் சென்னை பையன் பிரக்ஞானந்தா. உலகின் ஆகச்சிறந்த ஜாம்பவான்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சர்வதேசப் போட்டியில், நெற்றியில் திருநீறு அணிந்து, நம் பண்பாட்டைத் தவறவிடாமல், அதே சமயம் ஆட்டத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டி உலக சாம்பியன்களை மண்டியிடச் செய்துள்ளார்.

பன்னாட்டு வீரர்கள் வியந்து பார்க்கும் நார்வே செஸ் தொடரின் கோப்பையை ஒரு தமிழன் முதன்முறையாகத் தூக்கிப் பிடித்திருக்கும் இந்தத் தருணம், உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்குக் கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமையாகும்! உலக அரங்கில் தமிழனின் அறிவுத்திறனை மீண்டும் ஒருமுறை பறைசாற்றியுள்ளார் இந்த இளம் சாதனையாளர்.

ஜாம்பவான்களை வீழ்த்திய வேட்டை:
இந்த ஒட்டுமொத்தம் தொடரில் பிரக்ஞானந்தாவின் ஆட்டம் உலகையே வியக்க வைத்தது.

குறிப்பாக:
• உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை 2 முறை வீழ்த்தி அதிரடி காட்டினார்.

• உலக சாம்பியனான இந்தியாவின் குகேஷையும் ஒரு முறை வீழ்த்தி தனது அபார திறமையை நிரூபித்தார்.

இந்த அசாத்திய வெற்றியின் மூலம் பிரக்ஞானந்தா தனது சதுரங்கப் பயணத்தில் ஒரு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. அவருக்கு உலகத் தமிழர்கள் மற்றும் விளையாட்டு ரசிகர்கள் தரப்பில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன!

#Praggnanandhaa #TamilPride #தமிழன்பெருமை #NorwayChess2026 #ChessChampion #Grandmaster #BreakingNews #ChessHistory #TamilNews #SportsAchievement #ChennaiBoy #Tamilnadu #SwissTamilInfo #SwissTamil #Tamil

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button