இலங்கை

உலகக் கோப்பை கால்பந்தில் வரலாற்றுச் சாதனை: அவுஸ்திரேலிய அணியில் முதல் தமிழன் நிசான்!

 

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஒரு மகத்தான மைல்கல்லாக, முதல் முறையாகத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் ஒருவர் களம் காண்கிறார். வரும் ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள 2026 FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான அவுஸ்திரேலிய தேசிய அணியில், 25 வயதான நிசான் வேலுப்பிள்ளை (Nishan Velupillai) அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

 

பின்னணியும் கால்பந்து பயணமும்:

• பிறப்பு: அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிறந்த நிசான், ஈழத்துத் தமிழ் வம்சாவளித் தந்தைக்கும் ஆங்கிலோ-இந்தியத் தாய்க்கும் மகனாவார்.

• அணிப் பங்களிப்பு: சிறுவயது முதலே கால்பந்து விளையாட்டில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வந்த இவர், 2024 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலிய தேசிய அணியில் விளையாடி வருகிறார்.

• களப்பணி: நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் முக்கிய முன்னிலை (Forward) ஆட்டக்காரர்களில் ஒருவராக இவர் களம் இறங்குகிறார்.

உலக அரங்கில் மிக உயரிய கால்பந்து திருவிழாவான FIFA உலகக் கோப்பையில், தமிழ் அடையாளத்தோடு முதன்முதலாகப் தடம் பதிக்கும் நிசான் வேலுப்பிள்ளை, ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் மாபெரும் பெருமிதத்தைத் தேடித்தந்துள்ளார்.

“உலகக் கோப்பைக் கால்பந்து மைதானத்தில் சாதிக்கக் காத்திருக்கும் நிசான் வேலுப்பிள்ளை உலகக் கோப்பையை வெல்லவும், போட்டிகளில் சிறந்து விளங்கவும் உலகத் தமிழினம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துகள்!”

#NishanVelupillai #FIFAWorldCup2026 #TamilPride #Socceroos #TamilFootballer #WorldCup2026 #FootballHistory #MelbouneToWorldCup #TamilSportstar #SwissTamilInfo #SwissTamil #Tamil #சுவிஸ்தமிழர்தகவல்மையம்

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button