
அதன் 5ஆம் கட்ட தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நீண்ட கால அடிப்படையில் ஸ்திரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
எனவே, பொதுமக்கள் இந்த தற்காலிக விலை மாற்றங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை எனக் கேட்டுக்கொண்ட அவர், சர்வதேச சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் மக்களுக்கு சாதகமான விலையில் எரிபொருளை வழங்க அரசாங்கம் நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என உறுதியளித்தார்.





