
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் மற்றும் சிலாபம் வரையான கடல் பரப்புகளிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும். இதன் காரணமாக இக்கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் சீற்றமாகக் காணப்படும்
அத்துடன், கல்பிட்டியிலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக மாத்தறை வரையிலான கடலோரப் பகுதிகளில், கடல் மட்டம் உயர வாய்ப்புள்ளதாகவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.





