இலங்கை

வெசாக் விழா தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு

எதிர்வரும் வெசாக் காலப்பகுதியில் ஏற்பாடு செய்யப்படும் வெசாக் வலயங்கள் மற்றும் தான நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்து விசேட திட்டங்களையும் முறைப்படுத்துவதற்காக அரசாங்கம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

இதற்கமைய, வெசாக் மத வழிபாட்டின் போது பொருத்தமற்ற நடவடிக்கைகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவிக்கையில்,

 

வெசாக் கொண்டாட்டங்களின் போது ‘ஹெட்-பேங்கிங்’ (head-banging) இசை நிகழ்வுகள் மற்றும் ‘பயமுறுத்தும் வீடுகள்’ (haunted houses) போன்றவற்றை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று குறிப்பிட்டுள்ளார்.

 

அத்துடன், தானசாலைகளை ஏற்பாடு செய்பவர்கள் பௌத்த கொடிகளுக்குப் பதிலாக மஞ்சள் நிறக் கொடிகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை சாசன பாதுகாப்பு சபைகளின் மகாசங்கத்தினர் மற்றும் அரச நிறுவனங்கள் இணைந்து இந்த ஒழுங்குமுறைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் எனத் தெரிவித்த அமைச்சர், தானசாலைகள், வெசாக் அலங்காரங்கள், வீதிப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

 

பாதுகாப்புப் படையினருடனான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, பொருத்தமற்ற அலங்காரங்கள் மற்றும் காட்சிப்படுத்தல்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button