இலங்கை

மழை காரணமாக சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு

“சமீபத்திய நாட்களில் பெய்த பலத்த மழை காரணமாக, இம்முறை யால பருவத்தில் ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்கு ஹெக்டேயர் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை தெரிவித்துள்ளது.

மழையினால் பாதிக்கப்பட்ட நெல், சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் வெங்காயம் போன்ற பயிர்களுக்கு இந்த இழப்பீட்டுத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சேதமடைந்த பயிர்களுக்காக ஹெக்டேயர் ஒன்றுக்கு அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், மழையினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்களது பயிர்ச் சேத விவரங்களை அடுத்த பதினான்கு நாட்களுக்குள் தத்தமது பிரதேச விவசாய சேவை நிலையங்களில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button