இலங்கை

கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை: கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை – உயிர் காப்பு அங்கி கட்டாயம்!

நாட்டின் வடகிழக்கு திசையில் நிலவும் குறைந்த அழுத்தப் பிரதேசம் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார்.

கடலுக்குச் செல்லும் கடற்றொழிலாளர்கள் அனைவரும் பாதுகாப்பு கருதி கட்டாயம் உயிர் காப்பு அங்கிகளை (Life Jackets) அணிந்திருக்க வேண்டும் என பணிப்பாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

 

குறிப்பாக, கடலுக்குப் புறப்படுவது முதல் மீண்டும் கரை திரும்பும் வரை முழுமையான காலப்பகுதியில் இதனைப் பின்பற்றுவது அவசியமாகும்.

நாட்டைச் சூழவுள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

 

காற்றின் வேகம் மணிக்கு 25-35 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும்.

 

புத்தளம், சிலாபம் முதல் காலி, மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

கடலோரப் பகுதிகளில் சிறு படகுகள் மூலம் கடற்றொழிலில் ஈடுபடுவோர் வானிலை அறிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்க வேண்டும். கடல் கொந்தளிப்பாக இருந்தால் உடனடியாகக் கரை திரும்ப வேண்டும் அல்லது கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

 

பலநாள் மீன்பிடிக் கலன்கள் வழமை போன்று துறைமுகங்களிலிருந்து வெளியேறவும் கரை திரும்பவும் முடியும்.

நிலவரப்படி கடற்றொழிலில் ஈடுபட முழுமையான தடை விதிக்கப்படவில்லை, ஆனால் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மிக அவசியமானவையாகும் .

 

கடற்றொழிலாளர்கள் தமது உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கும் பொருட்டு, வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் கடற்றொழில் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் அறிவிப்புகளைத் தீவிரமாகப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button