இந்தியா

தமிழக அரசியலில் திடீர் திருப்பம்: ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே திரும்பினார் விஜய்!

தமிழகத்தில் ஆட்சி அமைப்பதற்கான அரசியல் காய்நகர்த்தல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆளுநரைச் சந்திக்காமல் பாதியிலேயே திரும்பியுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தங்களது ஆதரவை உறுதிப்படுத்தியிருந்தன. இதனைத் தொடர்ந்து, ஆட்சியமைக்க உரிமை கோருவதற்காகத் தமிழக ஆளுநரைச் சந்திக்கத் த.வெ.க தலைவர் விஜய் இன்று மாலை ‘மக்கள்பவன்’ நோக்கிப் புறப்பட்டார்

ஆளுநர் மாளிகை நோக்கிப் பயணித்த த.வெ.க தலைவர் விஜய், பாதி வழியிலேயே தனது பயணத்தைக் கைவிட்டுத் திரும்பியுள்ளார். ஆளுநர் தரப்பிலிருந்து சந்திப்பிற்கான நேரம் (Appointment) இன்னும் ஒதுக்கப்படவில்லை என்று கிடைத்த தகவலையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button