இலங்கை

காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் மழை

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

 

தற்போது நிலவும் வளிமண்டலத் தளர்ச்சியானது மே மாதம் 11ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுவதற்கான அதிக வாய்ப்பு உள்ளது.

இதன் விளைவாக, நாடு முழுவதும் தற்போது நிலவும் மழைக்காலநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதன்படி, நாட்டின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button