இந்தியா

ஈரானுக்குப் பிரதமர் மோடி கடும் கண்டனம் – ஐக்கிய அரபு அமீரகத்தில் 3 இந்தியர்களுக்குக் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் நடத்தியுள்ள திடீர் தாக்குதலுக்குப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்

இந்தத் தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ள நிலையில், பொதுமக்களை இலக்கு வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என அவர் சாடியுள்ளார்.

 

தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தின் ஊடாகவே பிரதமர் மோடி இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளா

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய எண்ணெய் முனையமான புஜைராவில் (Fujairah), ஈரான் ராணுவம் நடத்திய ஆளில்லா வானூர்தி மற்றும் ஏவுகணைத் தாக்குதலால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அங்கிருந்த எண்ணெய் ஆலை தீப்பற்றி எரிந்ததில், பணியில் இருந்த 3 இந்தியத் தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அமீரகத்தின் வான் பாதுகாப்புப் படை ஈரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழித்தாலும், சில ஆளில்லா வானூர்திகள் இலக்கைத் தாக்கியுள்ளன.”

 

பொதுமக்களையும், நாட்டின் அடிப்படை உள்கட்டமைப்புகளையும் தாக்குவது எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.

இந்தியா எப்போதும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குத் தோள் கொடுக்கும் நீடித்த பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்திப் பாதுகாப்பிற்கு, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகப் பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்தை உறுதி செய்வது இன்றியமையாததாகும் என பதிவிட்டுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button