கனடாவின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு பணவீக்கத்திற்கு ஏற்பச் சேவைக் கட்டணங்களைச் சரிசெய்வதற்காக ஏப்ரல் 30, 2026 முதல் நிரந்தரக் குடியிருப்பு விண்ணப்பக் கட்டணங்களை உயர்த்தியுள்ளது.
பெரும்பாலான பிரிவுகளில் கட்டணங்கள் தோராயமாக 4 முதல் 6 சதவிகிதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முக்கியப் பிரிவுகளுக்கான புதிய கட்டண விவரங்கள்
நிரந்தரக் குடியுரிமைக்கான கட்டணம் (Right of Permanent Residence Fee – RPRF): 575 டொலரில் இருந்து 600 டொலராக உயர்ந்துள்ளது.
எக்ஸ்பிரஸ் நுழைவு (Express Entry) மற்றும் மாகாண நாமினி திட்டம் (PNP): முதன்மை விண்ணப்பதாரருக்கான கட்டணம் 950 டொலரில் இருந்து 990 டொலராக உயர்ந்துள்ளது.
குடும்பப் பிரிவு (Family Class) ஸ்பான்ஸர்ஷிப்: முதன்மை விண்ணப்பதாரருக்கான கட்டணம் 545டொலரில் இருந்து 570 டொலராக உயர்ந்துள்ளது.

தொழில்முனைவோர் (Business category) பிரிவு: முதன்மை விண்ணப்பதாரருக்கான கட்டணம் 1,810 டொலரில் இருந்து 1,895 டொலராக உயர்ந்துள்ளது
ஏப்ரல் 30, 2026-க்கு முன்பாகவே உங்களது விண்ணப்பமும் கட்டணமும் IRCC ஆல் பெறப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால், நீங்கள் கூடுதல் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நீங்கள் ஏற்கனவே விண்ணப்பித்திருந்தாலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கட்டணத்தை (RPRF) இனிமேல்தான் செலுத்தப் போகிறீர்கள் என்றால், நீங்கள் புதிய கட்டணமான 600 டொலரை செலுத்த வேண்டியிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.