உலகம்

ஈரானிய எரிபொருள் கப்பலை வழிமறித்தது அமெரிக்கா!

அரபிக்கடலில் ஈரானிய ‘நிழல் கப்பற்படை’ (Shadow Fleet) கப்பல் ஒன்றை அமெரிக்க கடற்படை வழிமறித்துள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம் (CENTCOM) அறிவித்துள்ளது.

ஈரானின் எரிசக்தி மற்றும் எண்ணெய் பொருட்களைச் சர்வதேச சந்தைகளுக்குக் கடத்துவதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அமெரிக்காவினால் தடை விதிக்கப்பட்ட கப்பல்களில் ஒன்றான ‘ஆஃஏ ளுநஎயn’ என்ற கப்பலே இவ்வாறு வழிமறிக்கப்பட்டுள்ளது.

அரபிக்கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் USS Pinckney (DDG 91) என்ற ஏவுகணை அழிப்புக் கப்பலிலிருந்து புறப்பட்ட உலங்கு வானூர்தியின் மூலம் இந்த இடைமறிப்பு மேற்கொள்ளப்பட்டது.

 

பில்லியன் கணக்கான டொலர்கள் பெறுமதியான ஈரானிய எண்ணெய், எரிவாயு மற்றும் இதர எரிபொருள் தயாரிப்புகளைத் திருட்டுத்தனமாக வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்படும் 19 கப்பல்களில் இதுவும் ஒன்றாகும் என்று அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது

அமெரிக்க கடற்படையின் உத்தரவுக்கு இணங்க, குறித்த கப்பல் தற்போது ஈரானை நோக்கித் திருப்பி விடப்பட்டுள்ளது.

 

 

அமெரிக்க ஹெலிகாப்டர் ஒன்றின் பாதுகாப்புடன் அந்தக் கப்பல் ஈரானுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

 

அமெரிக்க திறைசேரி திணைக்களத்தினால் (US Treasury) ஏற்கனவே பொருளாதாரத் தடைகளுக்கு உள்ளாக்கப்பட்ட இந்த ‘நிழல் கப்பற்படை’, ஈரானின் பொருளாதாரத்திற்கு வலுசேர்க்கும் எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஹோர்முஸ் நீரிணையைச் சுற்றிப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அரபிக்கடலில் நடந்துள்ள இந்த நேரடி நடவடிக்கை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button