இலங்கை

குறைந்த விலையில் எரிபொருள் மற்றும் உரம்: இலங்கை அரசாங்கத்தின் அதிரடி நகர்வு

அமெரிக்க திறைசேரி திணைக்களம் ரஷ்யாவுடனான எரிபொருள் கொடுக்கல் வாங்கல்களுக்காக வழங்கியுள்ள விசேட சலுகைக் காலத்தைப் பயன்படுத்தி, எரிபொருட்களைக் கொள்வனவு செய்ய இலங்கை திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க – ஈரான் மோதல்களுக்கு மத்தியில் உலகளாவிய எரிசக்தி விலைகளை நிலைப்படுத்துவதற்காக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை 2026 மே 16 வரை அமெரிக்க திறைசேரி நீடித்துள்ளது.

 

இந்தநிலையில், தற்போதைய உலக சந்தை விலையை விட மிகக் குறைந்த விலையில் ரஷ்யாவிடமிருந்து மசகு எண்ணெய், நிலக்கரி மற்றும் உரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு அமைச்சின் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

 

இதன்படி, சலுகைக் காலம் முடிவதற்குள் கொள்வனவு கட்டளைகளை வழங்குமாறு ரஷ்யாவிலுள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

 

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் உயர்மட்ட விஜயங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்வு மற்றும் கப்பல்களுக்கான காப்புறுதி கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், இலங்கை தற்போது அதிக விலை கொடுத்து எரிபொருளைக் கொள்வனவு செய்து வருகிறது.

 

ரஷ்யாவுடனான இந்த நேரடி ஒப்பந்தம் நாட்டின் அந்நியச் செலாவணிச் சுமையைக் குறைக்கவும், எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

முன்னர் பலமுறை இது குறித்து ஆலோசிக்கப்பட்ட போதிலும், நேரக் குறைபாடுகள் காரணமாக நிறைவேற்ற முடியாமல் போன இந்தத் திட்டத்தை, தற்போதுள்ள அமெரிக்காவின் சலுகைக் காலத்திற்குள் முடிக்க அரசாங்கம் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது.

 

இதேவேளை இரண்டு நாடுகளுக்கும் இடையில் உயர்மட்ட சந்திப்புக்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

 

இதன்படி, 2026 மே 4 அன்று ரஷ்ய சுகாதார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்வார்.

 

இதனையடுத்து மே நடுப்பகுதியில் இலங்கை சுகாதார அமைச்சர் ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button