உலகம்

மேற்கு ஆசியா போர் தீவிரம் : ஹவுதி தாக்குதலால் செங்கடல் பாதை முடங்குமா? உலகம் பதற்றத்தில்

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சிப் படை, ஈரான் ஆதரவாக களமிறங்கியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

இந்த ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்தாலும், போர் பரவலாகும் அபாயம் தெளிவாகக் காணப்படுகிறது.

 

ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போது செங்கடல் வழித்தடமும் ஆபத்தில் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். உலக வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கடல் பாதை வழியாக ஆண்டுதோறும் மிகப்பெரிய அளவில் பொருட்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. உலக செய்திகள்

 

கடந்த காலத்தில் ஹவுதி படை இந்தப் பகுதியில் வர்த்தக கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்திய அனுபவம் இருப்பதால், மீண்டும் அதே நிலை உருவாகுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

இந்நிலையில், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஈரான் ஆதரவு அமைப்புகளும் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் ஒரே நேரத்தில் பல திசைகளில் இருந்து அழுத்தம் அதிகரித்து வருகிறது.

 

மேலும் சூயஸ் கால்வாய் போன்ற உலகின் முக்கிய கடல் வழித்தடங்களும் பாதிக்கப்படுமா என்ற கவலை அதிகரித்துள்ளது. இந்த பாதைகள் முடங்கினால் உலக பொருளாதாரத்தில் கடுமையான தாக்கம் ஏற்படும் என்பது உறுதி.

 

இதற்கிடையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு பதிலடி அளிக்கும் வகையில் ஈரானும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

 

பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளம் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் அமெரிக்க வீரர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில், ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் இந்த மோதலை சமாளிக்க மத்தியஸ்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

போரின் தீவிரம் அதிகரிக்கும் நிலையில், பல நாடுகள் சமாதான பேச்சுவார்த்தைக்கு முன்வந்துள்ளன. ஆனால் நிலைமை விரைவில் சீராகுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஹவுதி படையின் நேரடி பங்கேற்பு, இந்த போரை ஒரு பிராந்திய மோதலிலிருந்து உலகளாவிய தாக்கம் ஏற்படுத்தும் பிரச்சினையாக மாற்றி விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button