உலகம்

ஒஸ்கார் மேடையில் மத்திய கிழக்கு அமைதிக்காக குரல் கொடுத்த ஹொலிவூட் நடிகர்!

98 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் விழாவில், சிறந்த சர்வதேச திரைப்படத்திற்கான விருதை வழங்க மேடை ஏறிய பிரபல ஹொலிவூட் நடிகர் ஜேவியர் பார்டெம், உலகளாவிய அமைதி மற்றும் பாலஸ்தீன விடுதலை குறித்து உணர்ச்சிகரமான கோரிக்கையை முன்வைத்தார்.

 

“போர் வேண்டாம் மற்றும் பலஸ்தீனத்தை விடுவியுங்கள்” (No to war and free Palestine) என அவர் தனது உரையைத் தொடங்கியபோது, அங்கிருந்த உலகப் புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் விருந்தினர்களிடமிருந்து பலத்த கைதட்டல்கள் எழுந்து அவருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.

அமைதிக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்திய பார்டெம், தனது உடையில் “போர் வேண்டாம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முத்திரை (Pin) மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஒரு முத்திரை என இரண்டையும் அணிந்து மேடைக்கு வந்திருந்தார்

மத்திய கிழக்கில் போர் பதற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில், உலகின் மிக உயரிய கலை மேடையான ஒஸ்கார் மேடையில் ஒரு முன்னணி நடிகர் இவ்வாறான கருத்தை முன்வைத்தமை சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button