இலங்கை

தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக குற்றச்சாட்டு

நாட்டில் உள்ள அனைத்து தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்களும் டீசல் விநியோகத்தை கட்டுப்படுத்தியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பொது முற்போக்கு ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

 

கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் பொதுச் செயலாளர் பந்துல சமன் குமார இதனைத் தெரிவித்தார்.

 

இது குறித்து நாம் விசாரித்தபோது, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே, அடுத்த மாத இறுதி வரை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் டீசல் இருப்பு இருப்பதாகக் கூறினார்

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் டீசல் கொள்முதலுக்கான கட்டளையை கட்டுப்படுத்திய சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

 

இருப்பினும், இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதாகவும், அந்த நோக்கத்திற்காக எரிபொருள் விநியோகத்தை தொடர்ந்து பராமரிப்பதாகவும் லங்கா ஐஓசி கூறுகிறது.

 

அதன்படி, நாட்டில் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை பராமரிக்க லங்கா ஐஓசி மற்றும் அரசாங்கம் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக கூறியுள்ளார்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button