
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு மற்றும் ஊழியர் நலன்கள் தொடர்பாக, மின்சாரத் துறை தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான மற்றுமொரு கட்டக் கலந்துரையாடல் இன்று (13) நடைபெறவுள்ளது.
இலங்கை மின்சார சபை தொழில்நுட்பப் பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க உள்ளிட்ட 22 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கின்றனர்
இந்தச் சந்திப்பின் முடிவுகளைப் பொறுத்தே தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது





