உலகம்

மசகு எண்ணெய், இயற்கை எரிவாயுவின் விலை அதிரடியாக உயர்வு : உலக நாடுகளுக்குப் புதிய பொருளாதார நெருக்கடி

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் பதற்றங்கள் காரணமாக, உலகளாவிய சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

 

விநியோகச் சங்கிலியில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகும்.

 

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 90.90 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

 

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 92.69 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

 

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

அதன்படி, அதன் விலை 3.186 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

இந்தத் திடீர் விலை உயர்வு காரணமாக சர்வதேச அளவில் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்பதுடன், எரிபொருள் இறக்குமதியை நம்பியுள்ள இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரத்திலும் இது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button