உலகம்

கட்டாரில் உற்பத்தி பாதிப்பு: இந்தியாவில் தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகம் 30 வீதம் வரை குறைப்பு!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி காரணமாக, இந்தியாவின் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

இந்தியாவின் முன்னணி எரிவாயு சந்தைப்படுத்தல் நிறுவனமான GAIL மற்றும் இந்தியன் எண்ணெய் கூட்டுத்தாபனம் ஆகியன தொழிற்சாலைகளுக்கான எரிவாயு விநியோகத்தை 10 வீதம் முதல் 30 வீதம் வரை குறைத்துள்ளன.

 

இந்தியாவின் மிகப்பெரிய எல்.என்.ஜி இறக்குமதியாளரான Petronet LNG, விநியோகத் தட்டுப்பாடு குறித்து ஏனைய நிறுவனங்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.

 

உலகின் முன்னணி எல்.என்.ஜி உற்பத்தியாளரான கத்தார் மீது நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைத் தொடர்ந்து, அங்கு உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

 

எல்.என்.ஜி இறக்குமதியில் உலகின் 4 ஆவது பெரிய நாடாக இந்தியா உள்ளது. கட்டாரிடம் இருந்து அதிகளவில் எரிவாயுவை வாங்கும் இரண்டாவது பெரிய நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

 

பற்றாக்குறையை ஈடுகட்ட IOC, GAIL மற்றும் Petronet LNG ஆகிய நிறுவனங்கள் அவசரகால அடிப்படையில் ‘ஸ்பொட் டெண்டர்’ மூலம் எரிவாயுவை வாங்கத் திட்டமிட்டுள்ளன.

 

தற்போதைய போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் எரிவாயு விலை, கப்பல் போக்குவரத்து செலவு மற்றும் காப்புறுதி கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.

 

விநியோகக் குறைப்பானது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குறைந்தபட்ச விநியோக’ அளவின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டிய சட்டச் சிக்கல்களில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button