உலகம்

இஸ்ரேலில் உள்ள அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை : வெளியேற தூதரகம் உதவாது என அறிவிப்பு

இஸ்ரேலில் நிலவும் மோசமான பாதுகாப்புச் சூழலைக் கருத்திற்கொண்டு, அங்குள்ள தனது நாட்டுப் பிரஜைகளை வெளியேற்றுவதற்குத் தம்மால் உதவ முடியாது என அமெரிக்கத் தூதரகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் அமெரிக்கப் பிரஜைகளை இஸ்ரேலிலிருந்து வெளியேற்றவோ அல்லது நேரடியாக உதவவோ முடியாத நிலையில் உள்ளதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

 

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக ஜெருசலேமில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் டெல் அவிவ் கிளை அலுவலகம் ஆகியவை இன்று (செவ்வாய்க்கிழமை) மூடப்பட்டுள்ளன.

 

பென் குரியன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதுடன், வணிக ரீதியான விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

தூதரகம் நேரடியாக உதவவில்லை என்றாலும், இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்புவோருக்கு மாற்று வழிகளைச் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சகம் எகிப்தின் தாபா எல்லை நோக்கிச் செல்லும் விசேட பேருந்து சேவைகளை இயக்கி வருகிறது.

 

இந்தப் பேருந்துகளைப் பயன்படுத்த விரும்புவோர் இஸ்ரேலிய சுற்றுலா அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ‘வெளியேற்ற படிவத்தை’ இணையத்தளம் ஊடாகப் பூர்த்தி செய்து பதிவு செய்ய வேண்டும்.

 

“இந்தச் சேவையைப் பயன்படுத்தி வெளியேற விரும்புவோரின் பாதுகாப்பிற்கு அமெரிக்க அரசாங்கம் உத்தரவாதம் அளிக்காது, இது ஒரு தகவலாக மட்டுமே வழங்கப்படுகிறது” என தூதரகம் எச்சரித்துள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button