இலங்கை

கறுப்புப்பட்டி அணிந்து கடமையில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானம்

சுங்க அதிகாரிகளின் பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தீர்மானித்துள்ளது.

 

தமது பிரச்சினைகள் தொடர்பில் பலமுறை அதிகாரிகளுக்கு அறிவித்தும், இதுவரை அவற்றுக்கு முறையான தீர்வுகள் வழங்கப்படவில்லை என சுங்க தொழிற்சங்கக் கூட்டணி தெரிவித்துள்ளது.

 

இதன் காரணமாக, இன்று (24) முதல் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சுங்க அலுவலகங்களிலும் கறுப்புப்பட்டி அணிந்து கடமைகளில் ஈடுபட சுங்க அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

 

எவ்வாறாயினும், இந்த பிரச்சினை தொடர்பில் வரும் 26 ஆம் திகதி நிதி அமைச்சு, பொது சேவை ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினருடன் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

அந்தப் பேச்சுவார்த்தையின் முடிவுகளுக்கமைய, எதிர்வரும் வெள்ளிக்கிழமை சுங்க தொழிற்சங்கக் கூட்டணியின் பிரதிநிதிகள் கூடி, தமது தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்தகட்டத் தீர்மானங்களை எடுக்கவுள்ளனர்.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button