இலங்கை

கரையோர ரயில் மார்க்கத்தில் விபத்து – ரயில் சேவைகளும் தாமதம்

கரையோர ரயில் மார்க்கத்தில் கெப் ரக வாகனமொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

 

பயாகல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையொன்றிலேயே இன்று (22) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

காலியில் இருந்து மருதானை நோக்கிச் செல்லும் காலி குமாரி விரைவு ரயிலிலேயெ கெப் வண்டி மோதுண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்போது சாரதி படுகாயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பயாகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த ரயில் கடவையில் சமிக்ஞை அமைப்பு சரியாக இயங்கவில்லை என்றும், ரயில் கடவையில் சரியான பாதுகாப்பு வாயில் நிறுவப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

மேலும் இந்த விபத்து காரணமாக, கரையோர ரயில் மார்க்கத்தின் சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

 

 

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button