இலங்கை

திடீர் இடியுடன் கூடிய மழை : மாலை வேளையில் வானிலை மாற்றமடைய வாய்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று 75 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

 

அதன்படி, வடக்கு, வடமத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களிலும், மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button