இலங்கை

இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது – பாகிஸ்தான் உயர்ஸ்தானிகருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்

இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, 2026 T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என்ற தனது முந்தைய தீர்மானத்தை பாகிஸ்தான் மாற்றிக்கொண்டுள்ளது.

 

இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, நிலவி வந்த கருத்து வேறுபாடுகளைக் களைந்து இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாஹிம் உல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.

 

இலங்கையில் தனது சேவைக் காலத்தை பூர்த்தி செய்து விடைபெறவுள்ள நிலையில், நேற்று (10) முற்பகல் வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

 

இந்த விடயத்தில் இலங்கை மேற்கொண்ட இராஜதந்திர மத்தியஸ்தம் பாராட்டத்தக்கது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

 

3 நாட்களாகத் தொடர்ந்த இந்தப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை ஒருங்கிணைப்பதில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் வழங்கிய விரைவான ஒத்துழைப்புக்காக இலங்கைத் தரப்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.

 

அத்துடன், T20 உலகக் கிண்ணத் தொடர் தொடர்பில் நிலவி வந்த பல நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு இலங்கை எடுத்த இராஜதந்திர முயற்சிகளையும் உயர்ஸ்தானிகர் இதன்போது வெகுவாகப் பாராட்டினார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button