இலங்கை

பிரதான மார்க்கத்தில் தொடருந்து போக்குவரத்து பாதிப்பு

அலவ்வ, யட்டல்கொட பகுதியில் தொடருந்தொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக பிரதான பாதையின் (Main Line) போக்குவரத்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.

 

இந்தத் தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக அந்த மார்க்கத்தின் தொடருந்து பயணங்கள் தாமதமாகவோ அல்லது இரத்துச் செய்யப்படவோ வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் பயணிக்கும் பயணிகள் மற்றும் தூர இடங்களுக்குச் செல்லும் பயணிகள் இதனால் அசௌகரியங்களை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

தற்போது பிரச்சினை ஏற்பட்ட தொடருந்தை சரிசெய்யும் பணிகளில் தொடருந்து திணைக்கள ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதோடு, விரைவில் சேவைகளை வழமைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button