உலகம்

காசாவில் போர் முடிவுக்கு வருகிறதா? : 251 பணயக்கைதிகளும் மீட்பு – இஸ்ரேல் அதிரடி அறிவிப்பு

காசாவில், 843 நாட்களாக நீடிக்கும் போருக்கு மத்தியில், 251 பணயக் கைதிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

 

இறுதியாக, இஸ்ரேலிய இராணுவ வீரர் ரான் கிவிலியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், காசாவில் இருந்த 251 பணயக் கைதிகளும், உயிருடனும் உடலங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.

 

இந்தநிலையில், அமெரிக்கா, எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி ஆகிய நாடுகளின் பங்களிப்புடன் சர்வதேச அமைதிகாக்கும் படை காசாவில் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், ட்ரம்பின் சர்வதேச அமைதி திட்டத்தின் மேற்பார்வையில் காசாவை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button