இலங்கை

கத்தோலிக்க அருட்தந்தை மீது தாக்குதல் விவகாரம்: காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் பணி இடைநீக்கம்

கம்பஹா பகுதியில் கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் ஆறு பேரும் நேற்று (26) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

 

சந்தேகநபர்கள் எதிர்வரும் ஜனவரி 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

 

 

இதற்கிடையில், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னால் அமைதி போராட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button