
உடல் நலக் குறைவு காரணமாக சிரமத்திற்குள்ளான இலங்கையர் ஒருவரைப் பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளது.
பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவிலிருந்து குறித்த இலங்கையரை பாகிஸ்தான் கடற்படை மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தோனேசியக் கொடியுடன் பயணித்த வணிகக் கப்பலிலிருந்து, அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்ட நிலையில் அவர் மீட்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.





