இலங்கை

தகவல்களை வழங்குவதற்காக தமிழ் அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக அரசாங்கம் உறுதி

அனர்த்த முகாமைத்துவ நிலையம் உட்பட்ட முக்கிய அரச நிறுவனங்களுக்கு தற்காலிகமாக தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

அதற்கமைய, தற்போதைய நிலைமைகள் குறித்து தமிழ் மொழியில் தகவல்களை வழங்குவதற்கு தற்காலிகமாகவேனும் தமிழ் அதிகாரிகளை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபேவர்தன  செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையின் போது தமிழ் மொழியில் தகவல்களை பெற்றுக்கொள்ள பல முறை முயற்சிகளை முன்னெடுத்திருந்தது.

எனினும், தமிழ் மொழியில் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியாது போனது.

இது குறித்து, பொதுநிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபேவர்தனவிடம்,  செய்திச் சேவை சுட்டிக்காட்டியது

அதற்கு பதிலளித்த அமைச்சர், வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் உள்ளிட்டநிறுவனங்களில் தனிப்பட்ட ரீதியில் அல்லது உள்நோக்கம் கொண்டு தமிழ் அதிகாரிகளின் நியமனங்கள் புறக்கணிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

நியமனங்களின் போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டிருந்தால் அது குறித்து உடனடியாக கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், விசேட பதவி நிலைகளில் இவ்வாறான நெருக்கடி இருக்குமாயின் அது குறித்து தங்களுக்கு தெரியப்படுத்துமாறும் அமைச்சர் சந்தன அபேவர்தன கேட்டுக்கொண்டார்.

தமிழ் மொழி மூலம் அனர்த்த எச்சரிக்கைகள் குறித்து அறிவிப்பது முக்கியம் என்பதை தாம் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே, வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் என்பவற்றிலிருந்து தகவல்களை வழங்குவதற்கு தற்காலிகமாகவேனும், அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்தன அபேவர்தன செய்தி பிரிவுக்கு உறுதியளித்தார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button