
ஊவா மாகாண சபையின் அரச ஊழியர்கள் தங்கள் ஒரு நாள் சம்பளத்தை மாகாணத்தை மீளக் கட்டியெழுப்பும் பணிகளுக்காக நன்கொடையாக வழங்கத் தீர்மானித்துள்ளனர்.
ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல பெர்னாண்டோ, மாகாணத்தின் அனைத்து அரச அதிகாரிகளும் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்தில் உள்ள பதுளை மாவட்டமே ‘டிட்வா’ சூறாவளியால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.





