
இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு முழுமையாகப் பொருத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனைகளை ஏற்றிச் செல்வதற்கான இந்தியப் பேரிடர் நிவாரண வானூர்தி நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்தியாவின் ஆக்ராவிலிருந்து வந்த இந்த வானூர்தியில், இராணுவ மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்காக 73 பேரை உள்ளடக்கிய குழுவொன்றும் வருகை தந்துள்ளது.
அத்துடன், ஸ்கேனர்கள், மருந்துகள், தண்ணீர் கொள்கலன்கள், நோயாளர் காவு வாகனங்கள் மற்றும் குப்பைத் தொட்டிகள் உட்பட முழுமையாகப் பொருத்தப்பட்ட மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.








