இலங்கை

யாழ். உள்ளிட்ட பகுதி மக்களுக்கு முக்கிய அறிவித்தல்

இலங்கையின் தென்கிழக்கே, பாணமவுக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 06 மணித்தியாலத்தில் புயலாக வலுப்பெறும் வாய்ப்புள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை கிடைத்து வருகின்றன. நாடு முழுவதும் வெள்ள நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.

பல இடங்களில் நிலச்சரிவு நிகழ்வுகளும் அதன் மூலமான இறப்புக்களும் பதிவாகியுள்ளன. ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில்அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக மாவட்டச் செயலகத்தின் விசேட இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெறுவதற்காக மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.

பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் மு.ப 10.00 மணிக்கு நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொலைபேசி தானாகவே இணைக்கப்படும்
அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் இந்த அழைப்புகளுக்குப் பதிலளிப்பார். அவர் பதிலளிக்கத் தவறும்பட்சத்தில், அழைப்பு தனது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்குத் தானாகவே இணைக்கப்படும் எனவும் அரசாங்க அதிபர் பிரதீபன் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில், அனர்த்த அபாயக் குறைப்பு நடவடிக்கைகள் குறித்து உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்துகொண்ட அரசாங்க அதிபர், பின்வரும் முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அனர்த்தம் ஏற்படும்போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலக முடியாது. அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் உடனடியாக அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடி நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

மில்லியன் ரூபா நிதி

வடிகால்களைச் சீர்செய்ய முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியை உடனடியாக வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார்.

இக் கோரிக்கைக்கு உடனடியாக நிதியும் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டால், அந்த நிலையங்களில் சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமையில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் (தை) தொடக்கம் மார்ச் மாதம் (பங்குனி) வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button