இலங்கை

காலி, மாத்தறையில் வெள்ளம்: உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குப் படகு சேவை!

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் கடும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக, க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாணவர்கள் பாதுகாப்பாகப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவியுடன் படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திக்க குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் எந்தவொரு மாணவரும் பரீட்சையைத் தவறவிடக் கூடாது என்பதற்காகத் தேவையான அனைத்து மேலதிக நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button