அரசியல்இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தி மறுசீரமைக்கப்படும் – துஷார இந்துனில்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப் பதவியில் மாற்றம் வரப்போவதல்லை. எனினும், கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெற்று, வியூகம் மாற்றம் இடம்பெறும் என அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.

இரு ஜனாதிபதித் தேர்தல்கள் உட்பட நான்கு தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதனால், தலைமைப் பதவியில் மாற்றம் வேண்டும் என்ற கருத்தை சிலர் முன்வைத்து வரும் நிலையிலேயே, துஷார இந்துனில் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில், “மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருகின்றது.

எந்த முறைமையில் தேர்தல் நடைபெறும் என்பது தொடர்பான தகவல் வெளியான பின்னரே பிரச்சார வியூகம் வகுக்கப்படும். மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளேன்.” என்றார்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button