
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னஅறிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே குறித்த விடயத்தை அறிவித்துள்ளார்.
இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.





