மலையகம்

நுவரெலியா சீதையம்மன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்ட பிரித்தானிய உயர் ஸ்தானிகர்.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் நுவரெலியா சீதா அம்மன் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் ஆலய வரலாற்றைப் பற்றியும் கேட்டறிந்து கொண்டார்.

நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திற்கு வருகைத்தந்த இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகரை, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஆலய அறங்காவலர் குழுவின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழுவின் செயலாளர் சிவா குணசேகரம் ஆகியோர் வரவேற்றனர் .

வழிபாட்டினை தொடர்ந்து, பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சீதை அம்மன் ஆலய வரலாறு, தொன்மை தொடர்பிலும் கேட்டறிந்தார்.

அத்தோடு ஆலயத்திற்கு வருகை தரும் இராஜதந்திரிகளின் குறிப்பேட்டில் உயர் ஸ்தானிகர் ஒரு சிறப்பு குறிப்பை எழுதினார்.

உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசை கோயில் அறங்காவலர் குழுவின் நினைவுப்பரிசில் ஒன்றினையும் வழங்கி கௌரவித்தனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button