விளையாட்டு

இலங்கை – சிம்பாப்வே முதலாவது ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகிறது இலங்கை !

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று (29) சிம்பாப்வேயின் ஹராரேயில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளது.

சிம்பாப்வேக்கு எதிராக விளையாடும் இலங்கை அணிக்கு சரித்த அசலங்க தலைமை தாங்குகின்றார்.

அணியில், பத்தும் நிசங்க, நிசான் மதுஷ்க, குசல் மெண்டிஸ், சதீர சமரவிக்கிரம, ஜனித் லியனகே, கமிந்து மெண்டிஸ், துஷ்மந்த சாமிர, மகேஸ் தீக்ஷன, அசித பெர்னாண்டோ மற்றும் டில்சான் மதுசங்க ஆகியோர் விளையாடுகின்றனர்.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 4 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி 9 ஓட்டங்களை பெற்றுள்ளது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button