
கர்நாடகவைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு தென்னிந்திய நீதிமன்றமொன்று ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
34 வயதான அவர் தமது வீட்டுப் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்துக்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் எச்.டி. தேவகௌடாவின் பேரனும், சக்திவாய்ந்த அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவருமான பிரஜ்வால் ரேவண்ணா, 2023 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் பல காணொளிகள் வெளியாகின.
இதை தொடர்ந்து 47 வயதுடைய வீட்டு பணிப்பெண் ஒருவர் முறைப்பாடளித்தார்.
முன்னதாக குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், கடந்த வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் தாம் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து மன்னிப்புக் கோரினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள ஜனதா தளம் கட்சியை பிரஜ்வால் ரேவண்ணா பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.





