இலங்கை

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயம்!

1ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சபாபதிப்பிள்ளை வீதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

தனியாக சென்ற ஒருவர் மீது, முச்சக்கர வண்டியில் வந்த மூவர் அடங்கிய குழுவினர் இந்த வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இந்நிலையில் படுகாயமடைந்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button