
வெளிநாடுகளில் டிரில்லியன் கணக்கான பணம் பதுக்கி வைத்திருக்கப்படுவதாகக் கூறிய அரசாங்கத்தால், பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பெல்வத்த சீனி நிறுவனம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி அரச நிறுவனங்கள் தற்போது மிகவும் சரிவைச் சந்தித்து வருகின்றன என்று அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடி குறித்து அறியப்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த அரசாங்கம் பொய்களையும், ஏமாற்றுதல்களையும், மக்களைத் தவறாக வழிநடத்துவதையுமே மீண்டும் மீண்டும் செய்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கத்தால் பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி தொழிற்சாலைகளைப் பாதுகாக்க முடியாது போயுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்





