தமிழீழம்

அமைதி வழிப் போராட்டக்கார்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரித்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இருநாள் பயணமாக நேற்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் , மயிலந்தனை மாதவனை மேச்சல் தரை பிரச்சனைக்கு தீர்வு கோரி பண்ணையாளர்களால் போராட்டம் ஒன்றினை இன்றைய மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்துடன் இணைந்து மட்டக்களப்பு செங்கலடியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் பெருமளவான மக்களின் பங்களிப்புடன் போராட்டம் ஆரம்பமாகிய நிலையயில் பொலிஸாருக்கும் – போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தின் போது மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் தலைவி அ. அமலநாயகி மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொலிசாரால் காட்டுமிராண்டித்தனமாக தாக்கப்பட்டு இழுத்துச்செல்லப்பட்டனர்.

இந்த இலங்கை அரச பயங்கரவாத செயலை கண்டித்து கிழக்கு பல்கலைக்கழக மாணவ சங்கம் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button