தமிழீழம்

தடைகள், அச்சுறுத்தல்களைத் தாண்டி இடம்பெற்ற குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலய பொங்கல்.

வட  தமிழீழம் முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய பொங்கல் நிகழ்வு இடம்பெற்ற  நிலையில் தென்னிலங்கையிலிருந்து சிங்கள பொலிஸ், இராணுவ பாதுகாப்புடன் பெருமளவு சிங்களவர்கள் பேருந்துகளில் கொண்டுவந்து இறக்கிவிடப்பட்டதுடன்  தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பகுதிக்குள் குருந்தூர்மலையில்  பேரினவாத  பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றார்.

இவ்வேளையில் அங்கு  கூடியிருந்த தமிழர்களின் உறுதியினால் சிங்கள பேரினவாத அரசின் சதி  முறியடிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் குருந்தூர் மலை பொங்கல் நிகழ்வுக்கு சென்ற மக்கள் விரட்டி அடிக்கப்பட்டிருந்தனர்.

சிங்கள இனவாதிகளாலும் பொலிஸாராலும் குருந்தூர் மலையில் தமிழர்கள் பொங்கல் வைக்க இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.

அதுமட்டுமல்லாது குருந்தூர் மலையில் அடாத்தாக விகாரை அமைக்கப்பட்டதுடன், தொல்லியல் திணக்களமும் தன் பங்குக்கு தமிழர்களின் நிலத்தை தனதென அடாத்தாக ஆக்கிரமித்திருந்தது.

எனினும் தமிழ்மக்கள் குருந்தூர் மலையில் பொங்கல் வைக்க தடையில்லை என   நீதிமன்றம் உத்தவிட்டதை தொடர்ந்து இன்றையதினம்,  குருந்தூர் மலையில் தமிழ்மக்கள் பொங்கல் வைத்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.    

அதேவேளை இன்றையதினம்  தென்னிலங்கை  மக்களும் குருந்தூர் மலைக்கு சென்று விகாரையில்  வழிபாடுகளை  மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button