தமிழீழம்

ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே’-வவுனியாவில் போராட்டம்.

கருப்பு ஜூலை கலவரத்தை நினைவுகூர்ந்தும் ஒற்றுமையை வலியுறுத்தியும் வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை (14) மாலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் மூவின மக்களின் பங்குபற்றுதலுடன் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இதில் ஈடுபட்டவர்கள் ‘இனியும் கலவரம் வேண்டாம்’, ‘பிரிவினைகள் வேண்டாம்’, ‘சமூக ஒற்றுமையை குலைக்காதே’, ‘ஆட்சியாளர்களே இனவாதத்தினை தூண்டாதே’, ‘யாழ் நூலகத்தை எரித்தது இனவாதமே’, ‘நாடு பூராகவும் ஜூலை கலவரத்தை திட்டமிட்டு நடத்தியது ஆட்சியாளர்களே’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்ததுடன், இது தொடர்பில் பலவாறு கோஷங்களை எழுப்பினர்.

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button