சுவிஸ்

GTA VI கேமில் சுவிஸ் பெண்ணின் டாட்டூ கடை

வோ மாநிலத்தைச் (Vaud) சேர்ந்த டாட்டூ கலைஞர் மனுவேலா சோட்டோவுக்கு (Manuela Soto), உலகமே எதிர்பார்க்கும் “GTA VI” வீடியோ கேமில் சொந்த டாட்டூ கடை இருக்கிறது.

மனுவேலாவுக்கு 35 வயது. யவெர்டோன் (Yverdon-les-Bains) நகரைச் சேர்ந்தவர். 2018 முதல் அமெரிக்காவில் வசிக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு “Rockstar Games” என்ற அமெரிக்க கேம் நிறுவனம் அவரைத் தொடர்பு கொண்டது.

கேமில் வரும் கதாபாத்திரங்களுக்கான டாட்டூ டிசைன்களை வரைய, அந்த நிறுவனம் 25 டாட்டூ கலைஞர்களைத் தேர்ந்தெடுத்தது. அவர்களில் மனுவேலாவும் ஒருவர். கேமின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களான ஜேசன், லூசியா ஆகியோரின் டாட்டூகளும் இதில் அடங்கும்.

இது அவருக்கு முதல் சர்வதேச வெற்றி இல்லை. லத்தீன் அமெரிக்க ஹிப்-ஹாப், மங்கா படங்கள் கலந்த அவரது பாணி பல கதவுகளைத் திறந்தது. அமெரிக்காவின் பெரிய கலைக்கூடங்களில் அவரது படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன. பாடகி பில்லி எய்லிஷின் (Billie Eilish) “When the Party’s Over” பாடலுக்கான படத்தையும் அவர் வடிவமைத்தார். 2021-இல் “நியூயார்க் டைம்ஸ்” பத்திரிகை அவரைப் பற்றி எழுதியது.

கேமில் வரும் “Vice City” நகரத் தெருக்களில் இனி மில்லியன் கணக்கான வீரர்கள் அவரது கலையைப் பார்ப்பார்கள். இது தனக்கும், இத்தனை ஆண்டுகள் ஆதரவு தந்தவர்களுக்கும் பெரிய பெருமை என்று மனுவேலா கூறியிருக்கிறார்.


மூலம்: Le Matin
புகைப்படம்: benjamin lehman / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button