அடுத்த ஆண்டுக்கான (2027) சுவிஸ் மத்திய அரசின் பட்ஜெட் பற்றி கட்சிகளுக்குள் பெரிய மோதல் வெடித்துள்ளது. நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.
தேசிய சபையின் (Nationalrat) நிதிக் குழுவில், இடதுசாரி SP, பசுமைக் கட்சி, வலதுசாரி SVP மூன்றும் சேர்ந்து பட்ஜெட்டை மத்திய அரசிடமே (Bundesrat) திருப்பி அனுப்ப விரும்புகின்றன. Mitte, FDP, GLP கட்சிகளுக்கு இது பெரிய கோபம். “பட்ஜெட்டை வைத்து தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள்” என்று அவை சொல்கின்றன.
மூன்று கட்சிகளின் காரணங்களும் நேர் எதிரானவை. SVP இராணுவத்துக்கு இன்னும் பணம் வேண்டும் என்கிறது. ஆனால் மற்ற துறைகளில் செலவை வெட்டலாம் என்கிறது. SP சொல்வது வேறு. கல்வி, காலநிலை பாதுகாப்பு, மக்களின் வாங்கும் சக்தி ஆகியவற்றில் வெட்டி, இராணுவத்துக்குக் கூட்டுவதை அது ஏற்கவில்லை. இராணுவத்துக்கு தனியாக கூடுதல் நிதி திரட்ட வேண்டும் என்கிறது.
கூட்டத்தொடரில் பட்ஜெட்டை நிறைவேற்ற மூன்று வாரங்கள்தான் உள்ளன. முடியாவிட்டால், புத்தாண்டை பட்ஜெட் இல்லாமலே தொடங்கும் அபாயம் உள்ளது என்று SVP எச்சரிக்கிறது.
டிசம்பர் 9 அன்று புதிய மத்திய அமைச்சரும் (Bundesrat உறுப்பினர்) தேர்ந்தெடுக்கப்படுகிறார். SVP இரண்டு பெயர்களை மட்டுமே முன்வைத்துள்ளது. இது “ஒரே பெயர் போலத்தான்” என்று SP விமர்சிக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த இரு வேட்பாளர்களில் ஒருவர் காவல்துறையினருடன் மோதிய சம்பவத்துக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சில கட்சிகள் கோருகின்றன. மற்ற கட்சிகளின் வேட்பாளர் விசாரணைகள் அடுத்த வாரம் நடக்கின்றன.
மூலம்: SRF
புகைப்படம்: Andreas Fischinger / Unsplash





