சுவிஸ்

ADHS சிகிச்சைக்கு இரண்டு ஆண்டு காத்திருப்பு: சுவிஸ் அரசின் புதிய யோசனைகள் போதுமா?

ADHS உள்ளவர்கள் சிகிச்சைக்காக சில சமயம் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருக்கிறார்கள். இதைச் சரிசெய்ய சுவிஸ் மத்திய அரசு (Bundesrat) ஒரு அறிக்கையில் சில யோசனைகளை முன்வைத்துள்ளது.

ADHS என்பது கவனக்குறைவும் அதீத துறுதுறுப்பும் சேர்ந்த ஒரு குறைபாடு. இதற்கு சரியான பரிசோதனையும் சிகிச்சையும் தேவை. ஆனால் அதைச் செய்யக்கூடிய நிபுணர்கள் போதுமான அளவு இல்லை.

அரசு மூன்று விஷயங்களைச் சொல்கிறது. நிபுணர்களின் படிப்பையும் பயிற்சியையும் ஊக்குவிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் ஆலோசனை உதவிகளைக் கூட்ட வேண்டும். சிகிச்சை முறைகளையும் வழிகாட்டுதல்களையும் ஒரே மாதிரியாக்க வேண்டும்.

மைரிங்கன் (Meiringen) தனியார் மருத்துவமனையின் தலைமை டாக்டர் ஸ்டெஃபான் குப்ஃபர்ஷ்மிட் இந்த அறிக்கையைப் பற்றிக் கருத்துச் சொன்னார். அவர் சுவிஸ் ADHS நிபுணர் சங்கத்தின் நிர்வாகக் குழுவிலும் இருக்கிறார். இப்போது பரிசோதனைக்கு கேட்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். குடும்ப டாக்டர்கள், குழந்தை டாக்டர்கள், மனநல சிகிச்சையாளர்கள் போன்றவர்கள் குறைவாக இருக்கிறார்கள் என்றார்.

நாடு முழுவதும் அமலாகும் நடவடிக்கைகளை அரசு முன்வைக்கவில்லை. இதில் அரசு இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டும் என்பது அவர் கருத்து. 8 வயதில் ADHS உள்ள குழந்தைக்கு நல்ல சிகிச்சை கிடைக்காவிட்டால், 20 வயதில் மற்ற மன மற்றும் சமூகப் பிரச்சினைகள் வரும் வாய்ப்பு அதிகம் என்றும் அவர் எச்சரித்தார்.


மூலம்: SRF
புகைப்படம்: CDC / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button