சுவிஸ்

ஜெனீவாவில் க்ராக் பயன்படுத்துவோருக்கு டாக்டர் கண்காணிப்பில் கொகைன்

ஜெனீவா மாநிலம் (Geneva) ஒரு புதிய சோதனைத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துள்ளது. க்ராக் (crack) போதைப்பொருள் பயன்படுத்துவோருக்கு, டாக்டர்களின் கண்காணிப்பில் கொகைன் கொடுக்கப்படும். உலகில் இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.

இந்தத் திட்டம் 2027 முதல் படிப்படியாகத் தொடங்கும். ஆரம்பத்தில் 10 முதல் 20 பேர் மட்டுமே இதில் இருப்பார்கள். இவர்கள் ஏற்கனவே தொடர்ந்து க்ராக் பயன்படுத்துபவர்கள்.

கொகைனை இ-சிகரெட் மூலம் உள்ளிழுக்க வேண்டும். அப்போது மருத்துவ ஊழியர்கள் அருகிலேயே இருந்து கவனிப்பார்கள். கொகைனை ஒரு மருந்து நிறுவனம் வழங்கும்.

க்ராக் என்பது கொகைனிலிருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருள். இது மிகவும் கடுமையானது. இதற்கு மாற்று மருந்து இதுவரை இல்லை. அதனால் டாக்டர்களுக்கும் சிகிச்சை அளிப்பது கடினம்.

இந்தத் திட்டத்தின் நோக்கம் இரண்டு. க்ராக் பயன்படுத்துவோரை சிகிச்சைப் பாதைக்குக் கொண்டுவருவது. அவர்களின் உடல், மனப் பாதிப்பைக் குறைப்பது.


மூலம்: RSI
புகைப்படம்: Marie Martin / Unsplash

மேலும் வாசிக்க

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button