சூரிக் மாநிலத்தில் (Zürich) A1 நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 37 வாகனங்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
எஃப்ரெட்டிகான் (Effretikon) மற்றும் வின்டர்தூர் (Winterthur) நகரங்களுக்கு இடையே, செயின்ட் காலன் (St. Gallen) செல்லும் பக்கத்தில் இது நடந்தது. காயமடைந்தவர்களில் பாதிக்கு மேற்பட்டோருக்கு லேசான காயம். மற்றவர்களுக்கு நடுத்தரக் காயம்.
காயமடையாதவர்களை மீட்புப் படையினர் கெம்ப்ட்டால் (Kemptthal) ஓய்வு இடத்துக்கு அழைத்துச் சென்றனர். குளிரில் நிற்க வேண்டாம் என்று, அங்கே சூடான இடத்தில் வைத்து போலீஸ் அவர்களிடம் விசாரித்தது. பெரும்பாலான வாகனங்களை இழுத்துச் செல்ல வேண்டியிருந்தது.
அந்தப் பகுதியில் நெடுஞ்சாலை முழுவதும் மூடப்பட்டுள்ளது. மாலை வரை மூடியிருக்கலாம். அந்தப் பக்கம் போகாமல் தூரமாகச் சுற்றிப் போகுமாறு சூரிக் மாநில போலீஸ் கூறுகிறது. போக்குவரத்து நெரிசலும் இருக்கும்.
விபத்து எப்படி நடந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை. ஆனால் குளிர்காலச் சாலை நிலைமையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று போலீஸ் பேச்சாளர் கூறினார்.
மூலம்: SRF
புகைப்படம்: Matt Collamer / Unsplash





