சூரிக் மாநிலத்தில் (Zürich) A1 நெடுஞ்சாலையில் இன்று காலை பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. இதனால் எஃப்ரெட்டிகோன் (Effretikon) – வின்டர்தூர்-டோஸ் (Winterthur-Töss) இடையிலான பாதை மூடப்பட்டுள்ளது.
சூரிக் மாநில பொலிஸ் இதை X தளத்தில் அறிவித்தது. சென் காலன் (St. Gallen) திசையில் செல்லும் பாதை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியைத் தவிர்த்து, வேறு வழியாகச் சுற்றிப் போகுமாறு பொலிஸ் கேட்டுள்ளது. அந்த வழியில் பெரிய டிராஃபிக் நெரிசல் இருக்கும்.
காயமடைந்தவர்கள் பற்றியும், விபத்துக்கான காரணம் பற்றியும் இதுவரை தகவல் இல்லை. பாதை எப்போது திறக்கப்படும் என்பதும் தெரியவில்லை.
மூலம்: SRF
புகைப்படம்: Minku Kang / Unsplash





